சினிமா

வாவ்!! முகத்தில் சிரிப்புடன், சேலையில் தேவதைபோல் ஜொலிக்கும் நடிகை ஸ்ருதி ராஜ்!! வைரல் புகைப்படங்கள்..

Summary:

சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி

சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ஒருவர்தான் ஸ்ருதி ராஜ். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், தனது திறமையான நடிப்பினால் தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்து புகழின் உச்சிக்கு சென்றார்.

தென்றல் தொடரில் இவருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள், மீண்டும் சன் டிவியில் அழகு போன்ற தொடர்களில் நடித்தார். தற்போது சன் டீவியில் தாலாட்டு என்ற தொடரில் நடித்துவருகிறார்.

சீரியல், விளம்பரம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது  தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் அழகிய சிரிப்புடன் அன்றும் இன்றும் இளமை குறையாமல் தேவதை போல் உள்ள கியூட் புகைப்படம் ஒன்றை பதிவிட தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement