சினிமா Republic News

பிரமாண்ட படத்தை குடியரசு தினத்துக்கு ஒளிபரப்பும் சன் டிவி! என்ன படம் தெரியுமா?

Summary:

Sun tv republic day special movie sarkar

TRP போட்டியின் காரணமாக ஒவொரு தொலைக்காட்சி நிறுவனங்களும் நாளுக்கு நாள் புது புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.  அதுவம் பண்டிகை நாட்கள் என்றால் அணைத்து தொலைக்காட்சிகளும் ஏதாவது ஒரு மெகா ஹிட் ஆன படங்களையே ஒளிபரப்பு செய்கின்றனர்.

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிகப்படியான படங்கள் திரையிடப்பட்டன. ஆனால், தற்போது வாரம் நான்கு படங்கள் வெளியாகிறது. 
தியேட்டர்,  மல்டிப்ளெக்ஸ் திரையரங்கம் என அதிகரித்துவிட்டதால் வெளியாகும் படங்களை மக்களும் உடனுக்குடன் பார்த்துவிடுகின்றனர்.

ஆனால் முன்பெல்லாம் புதிதாக வெளியான படங்களை பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளிலையே மக்கள் அதிகம் பார்த்து வந்தனர். பண்டிகை நாட்கள், புது படங்கள் என்றால் அதற்கு பெயர்போனது சன் தொலைக்காட்சிதான்.

ஆனால், தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் வரும் சனிக்கிழமை மாலை 6 . 30 மணிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், AR முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெகாஹிட் திரைப்படம் "சர்க்கார்" ஒளிபரப்பாகவுள்ளது.


Advertisement