முடிவுக்கு வருகிறது பிரபல சன் டிவி சீரியல்? அடுத்த சீரியலுக்கான ப்ரோமோ ஆரம்பம்!

முடிவுக்கு வருகிறது பிரபல சன் டிவி சீரியல்? அடுத்த சீரியலுக்கான ப்ரோமோ ஆரம்பம்!



sun-tv-nandhini-seriyal-ending-soon-new-seriyal-lakshmi

தொலைக்காட்சி நிறுவனங்களில் இன்று இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் அது மிகையாகாது.

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே டிவி தொடர்களை அதிகம் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது இளைஞர்கள் தொடங்கி பலரும் டிவி சீரியல்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் சன் டிவி இல் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தெரிகிறது.

lakshmi store serial suntv

நந்தினி தொடரை பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தயாரித்து வருகிறார். நந்தினி சீரியலில் கங்காகவாக வரும் நித்யா ராம் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் நந்தினி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பூ அவர்கள் நடித்திருப்பார்.

தற்போது லக்ஷ்மி ஸ்டோர் என்ற புது நாடகத்திற்கான ப்ரோமோ சன் டீவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த ப்ரோமோவில் நடிகை குஷ்பூ முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். இதனால் நந்தினி தொடர் விரைவில் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.