சினிமா

இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது நந்தினி சீரியல்! சோகத்தில் ரசிகர்கள்!

Summary:

Sun tv nandhini serial ending on Saturday

தொலைக்காட்சி நிறுவனங்களில் இன்று இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் தொலைக்காட்சி நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த அபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் அது மிகையாகாது.

முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே டிவி தொடர்களை அதிகம் பார்த்து வந்தனர். ஆனால் தற்போது இளைஞர்கள் தொடங்கி பலரும் டிவி சீரியல்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் சன் டிவி இல் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியல் வரும் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.

நந்தினி தொடரை பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்கள் தயாரித்து வருகிறார். நந்தினி சீரியலில் கங்காகவாக வரும் நித்யா ராம் அவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பாம்பு, பேய், மாயம், மந்திரம் என பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த நந்தினி தொடர் வரும் சனிக்கிழமையுடன் முடிவடைகிறது.

தற்போது லக்ஷ்மி ஸ்டோர் என்ற புது நாடகத்திற்கான ப்ரோமோ சன் டீவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த ப்ரோமோவில் நடிகை குஷ்பூ முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். 


Advertisement