சினிமா

தளபதி 63 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல முன்னணி தொலைக்காட்சி.!

Summary:

sun tv buy satellite rights of suntv

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

தளபதி 63 படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. விஜய் இந்த படத்தில் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

thalapathy 63 satellite க்கான பட முடிவு

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கான சாட்டிலைட் உரிமையினை சன் டிவி மொத்தம் 52  கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement