என்னது பாண்டவர் இல்லம் நடிகைக்கு விவகாரத்தா?.. தனியொரு பெண்மணியாக சாதனை: இதுதாங்க தரமான சம்பவம்.!

என்னது பாண்டவர் இல்லம் நடிகைக்கு விவகாரத்தா?.. தனியொரு பெண்மணியாக சாதனை: இதுதாங்க தரமான சம்பவம்.!



SUn TV Actress Krithika Annamalai Divorce Single Mother

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்து பிரபலமான நடிகை கிருத்திகா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 

முன்னதாக கிருத்திகா மெட்டி ஒலி, ஆனந்தம், செல்லமே, கணவருக்காக உட்பட பல சீரியலில் நடித்து இருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரங்கள் இவருக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது.

கடந்த 2017ம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியொரு பெண்மணியாக இருந்தவர், அண்ணன் - அண்ணியுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார். தனது மகனையும் வளர்த்து வருகிறார். 

திருமணம் மற்றும் விவாகரத்து குறித்து அவர் தற்போதுதான் பொதுவெளியில் தெரிவித்து இருக்கிறார். 2012ல் கைக்குழந்தையுடன் அவர் எடுத்த புகைப்படத்தையும், 2023ல் மகனின் 12 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.