சினிமா

முதன்முறையாக வெளியான சன் டிவி 'நிலா' சீரியல் நடிகையின் சிறுவயது புகைப்படம்.!

Summary:

sun tv - serial actress - kavitha solairajan - child photo

ஒருகாலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் நாயகிகள்தான். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பலரையும் சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் மோகம்.

இந்நிலையில், தற்போது தமிழ் தொலைக்காட்சி டிவி சீரியல்களில் பலவற்றில் பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் கவிதா சோலைராஜா. அவற்றில் வள்ளி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, நீலி, அவளும் நானும், ஆனந்தம் மற்றும் உறவுகள் சங்கமம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 

சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நிலா’ சீரியலில் நடித்து வருகிறார். அதனால் ரசிகர்கள் அவரை ’நிலா’ புகழ் கவிதா என்று அழைக்கத் தொடங்கியுள்ளனர். கவிதா நேற்று(ஜூன் 5) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். 

View this post on Instagram

My childhood pick..... My favorite pick....

A post shared by Kavitha Solairaja (@kavithasolairaja) on

இதையொட்டி தன்னுடைய சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அதில், என்னுடைய குழந்தைப் பருவ படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement