வெட்டி தூக்கப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள்! பணிந்தது சர்க்கார் படக்குழு?

வெட்டி தூக்கப்படும் சர்ச்சைக்குரிய காட்சிகள்! பணிந்தது சர்க்கார் படக்குழு?



sun-pictures-agreed-to-remove-controversial-scenes-from

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.

இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்க்காருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sarkar movie

மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் படம் வெளியாகியுள்ள தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

கோவையிலும் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனால், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Sarkar movie

சென்னை காசி தியேட்டரிலும் அதிமுகவினர் குவிந்து, படத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.

விவகாரம் பெரிதானதை உணர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பட தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கேட்டுக்கொண்டதாகவும், அத்தகைய காட்சிகள் இன்று நீங்கப்பட்டு, நாளை படம் வெளியிடப்படும் எனவும் தயாரிப்பு நிறுவனம் கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.