அடப்பாவமே.. "எனக்கு ஹெல்ப் பண்ணுங்க., முடியல" - சுல்தான் பட நடிகரின் தற்போதைய பரிதாப நிலை..! இப்படி கூடவா நடக்கும்..!!

அடப்பாவமே.. "எனக்கு ஹெல்ப் பண்ணுங்க., முடியல" - சுல்தான் பட நடிகரின் தற்போதைய பரிதாப நிலை..! இப்படி கூடவா நடக்கும்..!!


sulthan-movie-actor-video-about-help

கார்த்திக்கின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு வெளியான திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தனர் பிரபு. இந்த படத்திற்கு பின்னர் பிரபுவுக்கு வேறேதும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் நடித்த சுல்தான் படத்தின் அடையாளமாக தனது பெயரை சுல்தான் பிரபு என மாற்றிக்கொண்டார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில், "என் பெயர் சுல்தான் பிரபு. நான் கார்த்திக் சார் நடித்த சுல்தான் படத்தில் நடித்துள்ளேன். எனக்கு அந்த பட வாய்ப்பு மட்டும் தான் கிடைத்தது. அதன்பின் பெரிய அளவில் பட வாய்ப்பு எதுவும் இல்லை. வேலை தேடி சென்றாலும் எனது உருவத்தை காரணம் காண்பித்து வேலை கொடுக்க முடியாது என்று கூறினார்கள். 

வீடு தேடி சென்ற சமயத்தில், நீ எந்த வேலைக்கு சென்று வாடகை தருவாய் என்று கேட்டு வீடு தரவில்லை. எனக்கு தெரிந்தவர்கள் மூலமாக வீடு கிடைத்தது. சுல்தான் படம் வெளியாகி 2 ஆண்டுகள் ஆகியும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிக்க ஆசை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

எனக்கு தெரிந்தவர் நான் படும் கஷ்டங்களை பார்த்து வீடு கொடுத்து பிழைக்க வழிவகை செய்துள்ளார். எனக்கு வாய்ப்பளித்து உதவுங்கள். எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்த பின்னர் தான் இந்த வீட்டை விட்டு செல்வேன்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.