சினிமா

கையில் சாட்டை, கண்களில் செம வெறியுடன் கார்த்தி! வெளியாகி மாஸ் காட்டும் சுல்தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

Summary:

கார்த்தியின் சுல்தான் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

ராஷ்மிகா மந்தன்னா நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் சுல்தான். ட்ரீம் வாரியர் நிறுவனம்  தயாரிக்கும் இப்படத்திற்கு 
விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளார்.  பிரமாண்டமாக தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கையில் சாட்டையுடன், கண்களில் வெறித்தனத்துடன் கார்த்திக் நிற்கிறார். இந்த திரைப்படத்தை பொங்கலை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement