முந்தானை முடிச்சு படத்தில் நடிகர் பாக்யராஜின் மகனாக நடித்தது யார்னு தெரியுதா? அட. விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல் நடிகைதாங்க..

Summary:

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக இருக்கும் பாக்யராஜ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்த

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக இருக்கும் பாக்யராஜ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது.

 முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் உடன் ஊர்வசி, தீபா, கே.கே சௌந்தர், தவக்களை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

முந்தானை முடிச்சு படத்தில் மனைவியை இழந்த நடிகர் பாக்யராஜ் கைக்குழந்தையுடன் தனியாக கஷ்டப்படுவார். அவரை ஊர்வசி திருமணம் செய்து கொள்வார். இந்தப்படத்தில் பாக்யராஜின் மகனாக நடித்தது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதாவாம். கேரளா மாநிலத்தை சேர்ந்த சுஜிதா  ஏராளமான சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாகவும் அசத்தியுள்ளார்.


Advertisement