முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சுஜா வருணி! குழந்தையின் பெயர் என்ன தெரியுமா - புகைப்படம் இதோ.



Suja varuni child photo

தமிழ் சினிமாவில் தனது அழகான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. என்னதான் பல்வேறு சினிமாவில் நடித்திருந்தாலும் இவர் அதிகம் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்தான்.

நடிகை ஓவியாப்போல் சுஜா நடந்துகொள்ள முயற்சிக்கிறார் என்ற புகார்கள் வந்தாலும் போட்டியின் இறுதி வரை சென்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் சுஜா. 

சுஜா varuni

அதனை தொடர்ந்து  சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன்  சிவகுமாரும் 10 ஆண்டுகளாக  காதலிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஆண்டு  இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது முதன் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனது குழந்தைக்கு "அத்வைத்" என பெயர் சூட்டியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.