மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பில் தகராறு! போலீசில் புகார் அளித்த நடிகைகள்! வெளியான ஷாக் தகவல்!
தற்காலத்தில் திரைப்படங்களை விட வெள்ளித்திரை சீரியல்களுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த காலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். மேலும் ஒருநாள் சீரியல் பார்க்கவில்லை என்றாலும் வாழ்வில் பெரிதாக எதையோ இழந்ததைப் போல கவலைப்படும் ரசிகர்கள் உள்ளனர். சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகளை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பாவித்தும் வருகின்றனர்.
இவ்வாறு உள்ள தனியார் தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் செம்பருத்தி. இந்த சீரியலுக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இத்தொடரில் வரும் ஆதி மற்றும் பார்வதி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது.
இந்நிலையில் சமீபத்தில் மதுரவாயல் அருகேயுள்ள வானகரத்தில் மண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெறுவது போன்ற காட்சி சூட்டிங் நடைபெற்றது. இதில் ஏராளமான துணை நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்கள் சரியாக நடிக்கவில்லை என இயக்குனர் நீராவி பாண்டியன் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துணைநடிகைகள் நடிப்பதை புறக்கணித்துவிட்டு திருவேற்காடு காவல் நிலையத்தில் இயக்குனர் நீராவிபாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் இயக்குனர் நீராவிபாண்டியனை காவல்நிலையத்திற்கு அழைத்து பேசியுள்ளனர். மேலும் துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்குமாறும் கூறி அனுப்பியுள்ளனர்.இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.