கமலஹாசன் செய்த செயலால்.. ஆவேசமடைந்து கத்த ஆரம்பித்த கல்லூரி மாணவர்கள்.!

கமலஹாசன் செய்த செயலால்.. ஆவேசமடைந்து கத்த ஆரம்பித்த கல்லூரி மாணவர்கள்.!



student-shout-at-during-kamalhasan-speech-in-college-pr

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்திற்குப் பிறகு, ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் திருப்பதி மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடந்து கொண்டிருந்தது.

கமலஹாசன்

தற்போது சென்னையில் இந்தியன் 2 ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கு மேடையில் ஆங்கிலத்தில் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

இதுபோன்ற நிலையில், மாணவர்கள் பக்கத்திலிருந்து திடிரென்று அனைவரும் ஒன்றுகூடி "தமிழ்...தமிழ்..." என்று கத்த தொடங்கினர். இதை கேட்ட கமலஹாசன் "நன்றி...நன்றி" என்று கூறிவிட்டு தமிழில் பேச ஆரம்பித்தார். இதை கேட்டு மாணவர்கள் கூட்டமாக மகிழ்ச்சியில் ஆர்பரித்தனர்.

கமலஹாசன்

இதன்பின் கமலஹாசன் மேடையில் பேசியதாவது, "தனக்கு அறிவுரை கூற நிறைய பேர் இருந்த போதிலும் நான் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை. அதற்காக தற்போது வருந்துகிறேன். என் வாழ்க்கையின் முடிவை நானே எடுக்கும் போது என் பெற்றோர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். நாம் எடுக்கும் முடிவில் எப்போதும் தெளிவாக இருக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆங்கிலத்தில் தொடங்கிய பேச்சை அவர் தமிழில் முடித்தார்.