சினிமா

விஜய் சேதுபதிக்கு நாளை சென்னையில் சிலை, படக்குழுவினரின் அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Summary:

statue for vijaysethupathi on tomorrow

சீதக்காதி படத்தில் வயதான அய்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் மெழுகுச் சிலையை படக்குழுவினர் நிறுவ திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் சீதக்காதி.

 இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் ரம்யா நம்பீசன், பார்வதி நாயர், காயத்ரி, அர்ச்சனா உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.  இப்படம் இம்மாதம் 20ம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இப்படம் வெளியிடுவதற்கான இறுதி கட்ட வேலையில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

seethakathi க்கான பட முடிவு

இதனை தொடர்ந்து, சமீபத்தில் சீதக்காதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் விஜய் சேதுபதி 'அய்யா' என்ற கதாபாத்திரத்தில் முதியவர் வேடத்தில் தோன்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். 

இந்நிலையில், படத்தின் புரோமோசனுக்காக படக்குழு விஜய் சேதுபதியின் வயதான 'அய்யா' கதாபாத்திரத்தை சிலையாக வைக்க  திட்டமிட்டுள்ளது. 

மேலும் நாளை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இந்த சிலை வைக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பேஷன் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது. 
 


Advertisement