சுருதிஹாசன் ஆணாக பிறந்திருந்தால், இவரை தான் திருமணம் செய்திருப்பாராம்! யார் அந்த நடிகை தெரியுமா?

சுருதிஹாசன் ஆணாக பிறந்திருந்தால், இவரை தான் திருமணம் செய்திருப்பாராம்! யார் அந்த நடிகை தெரியுமா?


sruthi wants to marry tamanah

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுருதி, தான் ஆணாக பிறந்திருந்தால், நடிகை தமன்னாவை தான் திருமணம் செய்துகொள்வேன் என கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் கமலைப் போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் துவங்கியவர். இவர் 2000ஆம் ஆண்டு வெளியான கமலின் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன்பின் சூர்யாவுடன் ஏழாம் அறிவு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் சுருதிஹாசன். மெல்லிய உடல் அமைப்பு கவர்ச்சியான உடை மற்றும் நடனம் மூலம் ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் சுருதிஹாசன். மேலும் ஒரு பாடகியாகவும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

shruthi hasan

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுருதியிடம், "நீங்கள் ஆணாக பிறந்திருந்தால் யாரை காதலித்திருப்பீர்கள்?" என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுருதி, "தான் ஆணாக பிறந்திருந்தால், நடிகை தமன்னாவை தான் திருமணம் செய்திருப்பேன். அவர் அவ்வளவு இனிமையானவர். அவரை அவ்வளவு சுலபமாக நான் விட்டு விலக மாட்டேன்" என கூறியுள்ளார்.