நடிகர் ரஜினியின் படத்தில் ஹீரோயின், அக்கா மற்றும் அம்மாவாக நடித்துள்ள ஒரே நடிகை! யார்னு பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஏராளமா னஹிட் திரைப்படங்களில் நடித்து ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர்கள் நாளடைவில் முக்கிய இளம் நடிகர்களின் அக்காவாகவும், பின்னர் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். ஆனால் சில நடிகைகள் மட்டுமே ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு இணையாக கதாநாயகியாக நடித்த நடிகர்களுக்கே அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இவ்வாறு தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீவித்யா நடித்துள்ளார். அதாவது சினிமா திரையில் ரஜினி அறிமுகமான முதல் படம் அபூர்வ ராகங்கள். இதில் ஸ்ரீவித்யா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ரீவித்யா வாய்ப்புகள் குறைந்த நிலையில், உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்திருந்தார். பின்னர் சில காலங்களுக்குப் பிறகு மார்க்கெட் இல்லாமல் போன நிலையில் தளபதி படத்தில் ரஜினிக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். இவ்வாறு ஸ்ரீவித்யா நடிகர் ரஜினியின் படத்திலேயே கதாநாயகி,அக்கா மற்றும் அம்மா என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.