தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கிரீன் பார்க் ஹோட்டலில், இரவு முழுவதும்.. ஸ்ரீ ரெட்டியின் வலையில் சிக்கிய பிரபல தமிழ் அரசியல் வாரிசுநடிகர்! வைரலாகும் மோசமான பதிவு!
தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் தனக்கும் பட வாய்ப்பு தருவதாக நடிகர்கள், இயக்குனர்கள், மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரும் ஏமாற்றிவிட்டதாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெருமளவில் பிரபலமானார்.
மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றசாட்டைவைத்தார். அதனை தொடர்ந்து அவரது பார்வை தமிழ் சினிமா பக்கம் திரும்பி, பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு இவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் அவர் அவ்வப்போது நடிகைகள் மீதும் குற்றசாட்டை வைத்து வந்தார். இதனை தொடர்ந்து தற்போது அவர், அரசியல் தலைவரின் வாரிசும், பிரபல நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீது பாலியல் குற்றசாட்டை வைத்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் சார். மூன்று வருடத்திற்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற கதிர்வேலன் காதல் பட சூட்டிங் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். அப்பொழுது நாம் இருவரும் நடிகர் விஷால் ரெட்டி மூலமாக சந்தித்தோம். அப்பொழுது நீங்கள் எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி கொடுத்தீர்கள்.
பின்னர் கிரீன் பார்க் ஹோட்டலில் இரவு முழுவதும் நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். அப்பொழுது நாம் இருவரும் நிறைய செய்துள்ளோம். ஆனால் இதுவரை நீங்கள் எந்த வாய்ப்பும் தரவில்லை. ஆனால் நாங்கள் உங்களுடன் இருந்ததை மறக்கமாட்டேன் என மோசமாக பதிவிட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.