தமிழகம் சினிமா

திருமணம் குறித்து பிரபல நடிகையின் பதில்!!!!

Summary:

srireddy about marriage

தெலுங்கு திரையுலகில் சில மாதங்கள் வீசிய ஸ்ரீரெட்டி புயல் தற்போது தமிழ் திரையுலகிலும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் கோலிவுட் திரையுலகமே பரபரப்பின் உச்சத்தில் உள்ளது. மேலும் ஆந்திராவில் அரை நிர்வாணமாக போராடியும் நீதி கிடைக்காததால் இனி சென்னையில் தான் இருக்க போவதாகவும் கூறியுள்ளார். 

sri reddy photos க்கான பட முடிவு

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கதாநாயகியாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி இவரை பலர் பாலியல் ரீதியாக பயன்படுத்தி விட்டு, பிறகு பட வாய்ப்புகள் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர் என்று கூறினார்.  

தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏமார்ந்த இவர் ஒரு கட்டத்தில், அவருடைய வாழ்க்கை குறித்து எதுவும் யோசிக்காமல் துணிந்து, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்ட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பெயர்களை வெளியிட்டார். 

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வீர்களா..? என்பது குறித்து இவரிடம் எழுப்பிய கேள்விக்கு: திருமணம் என்பதை பற்றி தற்போது யோசிக்கவே இல்லை. ஒருவேலை என்னுடைய பழைய வாழ்க்கை முழுவதும் அறிந்து என்னை திருமணம் செய்து கொள்ள யாரேனும் முன்வந்தால் அவரை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். 


Advertisement