சினிமா

நடிகை ஸ்ரீதேவிக்கு இப்படியொரு நோயா? இப்படித்தான் அவர் உயிரிழந்தாரா? வெளியான பகீர் தகவல்!

Summary:

Sridevi dead detail leaked

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி.  அதனை தொடர்ந்து அவர் கமல், ரஜினியுடன்  இணைந்து பல திரைப்படங்களில் நடித்த இவற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். மேலும் கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி  அங்கு நட்சத்திர ஹோட்டல் குளியலறையில் பாத் டப்பில் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் அவரது மரணத்தில் மர்மங்கள் இருப்பதாக பலரும் சந்தேகப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் ஒன்று வெளியானது. அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு ரத்தக் கொதிப்பு நோய் இருந்ததாகவும், அதனால் அவர் இரண்டு, மூன்று முறை பாத்ரூமில் மயங்கி விழுந்திருக்கிறார் என்று கூறியுள்ளனர். மேலும் அவ்வாறு தான் துபாயிலும் அவர் மயங்கி விழுந்து தண்ணீருக்குள் மூழ்கி இறந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 


Advertisement