சினிமா

வாவ்! இவங்களுக்குள்ள இப்படியொரு திறமையா? லாக்டவுனில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் செய்த வேலையை பார்த்தீர்களா! பூரித்துப் போன தந்தை போனிகபூர்!

Summary:

Sridevi daughters drawing in corono lockdown

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம்,  மலையாளம், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

ஸ்ரீதேவி கடந்த 1996ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். தாய் மறைவிற்குப் பின்பு கதாநாயகியாக களமிறங்கிய ஜான்வி கபூர் தடக், குஞ்சன் சக்சேனா ஆகிய  படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா அச்சுறுத்தலால்  வீட்டிலேயே முடங்கியிருக்கும் ஜான்வி கபூர் தனது ஓய்வு நேரங்களில் ஓவியங்கள் வரைந்து அசத்தியுள்ளார்.  மேலும் குஷி கபூரும் சகோதரியுடன் இணைந்து ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து அவர்களது தந்தை போனிகபூர்  தனது ட்விட்டர் பக்கத்தில், மகள்களை நினைத்து தான் மிகவும் பெருமைப்படுவதாக கூறி,   ஊரடங்கில் அவர்கள் வரைந்த ஓவியங்களை வெளியிட்டு அவர்களை வாழ்த்தியுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்களும் அவர்களது திறமைகளை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

 


Advertisement