சினிமா

ஆத்தாடி! சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டிக்கு இப்படியொரு ஆசையா? கடைசியில் அஜித்தையும் விட்டு வைக்கலையா!!

Summary:

sri reddy talk about ajith

சினிமாவில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் இவர் தன்னையும் பட வாய்ப்பு தருவதாக நடிகர்கள், இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் ஏமாற்றிவிட்டதாக அரைநிர்வாண போராட்டம் நடத்தி பெருமளவில் பிரபலமானார்.

மேலும் இவர் தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மீதும் பாலியல் குற்றசாட்டைவைத்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர்சி, ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக தன்னை  ஏமாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டை வைத்தார். இவ்வாறு இவரது பட்டியல் நீண்டு கொண்டே சென்ற நிலையில் இதற்கு  பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

sri reddy க்கான பட முடிவு

மேலும்  ஸ்ரீ ரெட்டி நடிகைகள் குறித்தும் அவ்வப்போது  மோசமாக விமர்சனம் செய்து வம்புக்கு இழுத்து வருகிறார். இந்நிலையில் . சமீபத்தில் அவர் தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்;அதில் எந்த நடிகருக்கு நீங்கள் மனதில் இருந்து பாசத்தோடு முத்தம் கொடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்கு ஸ்ரீ ரெட்டி, தல அஜித்திற்குதான்  காம உணர்வே இல்லாமல் அன்போடு நான் அப்படியொரு முத்தம் கொடுப்பேன். ஏனென்றால் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் பெண்களின் நிலைகுறித்து சமுகத்திற்கு சொல்லிய படம். திரைத்துறையில் தான் ஒரு ஜாம்பவான் என்பதை அஜித் நிரூபித்துள்ளார்.இதற்காக நடிகர் அஜித்திற்கு லெஜெண்ட் விருதையும் வழங்கலாம் என்று கூறியுள்ளார்.


Advertisement