சினிமா

அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்! சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து சர்ச்சை! ஷாக் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை!!

Summary:

அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்! சமந்தா- நாகசைதன்யா விவாகரத்து சர்ச்சை! ஷாக் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2017ஆம் முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நட்சத்திர தம்பதிகளான விளங்கி வந்த இருவரும் ஒருவரை ஒருவர் பிரியவுள்ளதாக அண்மையில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்திற்கான காரணம் என பல தகவல்கள் பரவி வந்தது. மேலும் சமந்தாவுக்கும், ஆடை வடிவமைப்பாளரான ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் இடையே ஏற்பட்ட தகாத உறவும் விவாகரத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இந்நிலையில் இதெல்லாம் வதந்தி என சமந்தா விளக்கம் அளித்திருந்தார். மேலும் ப்ரீத்தம் ஜுகல்கரும் சமந்தா எனக்கு சகோதரி போல. எங்களுக்கு இடையே இருக்கும் உறவு குறித்து நாக சைதன்யாவுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சமந்தா  விவாகரத்து குறித்து பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் சமந்தா மற்றும் ப்ரீத்தம் ஜுகல்கருக்கிடையே உள்ள உறவால் விவாகரத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் ப்ரீத்தம் ஒரு ஓரினச்சேர்க்கையாளர்.  அதனால் இருவருக்கும் இடையே தகாத உறவு இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 


Advertisement