சினிமா

யார் இந்த ஸ்ரீ ரெட்டி? அவர் ஏன் இத்தனை நபர்களுடன் படுக்கையை பகிர்ந்தார்? அதிர வைக்கும் காரணம்.

Summary:

sri reddy open talk by why sharing bed with celebrities

தெலுங்கு திரையுலகில் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக கூறி அரை நிர்வாணா போராட்டம் நடத்தினர் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் சினிமா பிரபலன்களான இயக்குனர்கள் முருகதாஸ், சுந்தர் சி மற்றும் பிரபல நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மீதும்  பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து, பரபரப்பாக்கியவர் நடிகை ஸ்ரீரெட்டி. 

வரும் நாட்களில் இன்னும் பல நடிகர்கள் பற்றிய தகவல்களை கண்டிப்பாக வெளியிடுவேன் என கூறி மேலும் பீதியை கிளப்பியுள்ளார். எனவே இவரது லிஸ்டில் அடுத்து யார் பெயர் இடம்பெறும் என ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் ஏன் பிரபலங்கள் பலருடன் படுக்கையை, பகிர்ந்து கொண்டேன் என்றும் அதற்கு என்ன காரணம் என்பதையும் அவரே கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீரெட்டி பேசுகையில், "தனக்கு நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அழகு நிலையம் வைத்திருந்த என்னிடம், வாடிக்கையாளர் தன்னை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகும்படி அறிவுறுத்தினார். அவரது ஆலோசனையின்படி தான் ஒரு தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணியாற்றினேன்.

மேலும், நான் முதலில் ஆடிஷன் சென்றபோதே அது கிளிக் ஆகி விட்டது. நல்ல சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது பலர் என்னை சினிமாவில் நடிக்க முயற்சி அறிவுறுத்தினார்கள். திரைப்படத்தில் நடிக்க முயற்சித்த போது. ஆரம்பத்தில் சிறு வேடத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் ஹீரோயினாக வேண்டும் என்கிற தனக்கு வந்தது.

திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உண்மை தனக்கு அப்போது தான் தெரிய வந்ததாகவும், இதனான் நான் என் மனசு சொல்லுவதையும் மீறி பலருடைய ஆசைக்கு என்னையே விருந்தாக்கினேன் என்கிற தகவலை கூறி அதிர வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி.


மேலும் தன்னை சந்தித்த சில இயக்குனர்கள், மற்றும் நடிகர்கள் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறியதால். அவர்களை நம்பி என்னையே இழந்து ஏமார்ந்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் இனி என்னை போன்ற ஒரு நிலை எந்த ஒரு பெண்ணிற்கும் வர கூடாது என்பதற்காகவே, இந்த தகவல்களை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.


Advertisement