தமிழகம் சினிமா

ஜெயலலிதாவாக வாழ ஆசைப்படும் ஸ்ரீ ரெட்டி - என்ன காரணம் தெரியுமா?

Summary:

Sri reddy likes to be like jayalaitha

தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டினார்.

முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். மேலும் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினார்.

இவர்களைத் தொடர்ந்து, நடிகர் ஆதியின் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து, முன்னணி நடிகைகளை பற்றி தகவல்களை கூறியுள்ளார். அதில் சமீபத்தில் ஸ்ரீரெட்டி கூறிய தகவல் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவே தனக்கு உந்து சக்தி என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா எனக்கு உந்து சக்தி. அவர் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து பெரிய இடத்திற்கு உயர்ந்தார். அவரைப் போலவே நானும் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை. என் வாழ்க்கையை பெண்களின் முன்னேற்றத்திற்காக தியாகம் செய்வேன். சமூக சேவைகளில் ஈடுபட்டு மக்களுக்காக பாடுபடுவேன்” என அவர் கூறியுள்ளார்.இதனால் திரைத் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement