சினிமா

ஸ்ரீரெட்டியின் வாழ்கை படத்திற்கு இதுதான் தலைப்பா? கலக்கத்தில் பிரபலங்கள் !!

Summary:

sri reddy life story movie title leaked

சினிமாத்துறையில்  நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக அரை நிர்வாண போராட்டம் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

மேலும்  தெலுங்கு திரையுலகின் பல பெரும் புள்ளிகள் மீது பாலியல் குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை கிளப்பினார். 

பின்னர் இவரது பார்வை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பிரபல இயக்குனர் முருகதாஸ், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் என இவரது பாலியல் குற்றசாட்டுகள் நீண்டுகொண்டே போனது.

sri reddy க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து சென்னையிலேயே தங்கிய ஸ்ரீரெட்டி தற்போது பலபடங்களில் நடித்தது வருகிறார்.மேலும் அதனை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி தற்போது அவரது  வாழ்க்கை படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இப்படத்தை ரவிதேவன் என்பவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்கி வருகிறார்.மேலும் இப்படத்திற்கு 'ரெட்டி டயரி' என பெயரிடப்பட்டுள்ளது.

இவரின் வாழ்க்கை வரலாறு என்பதால் அவருடன் தொடர்பில் இருந்த பல இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்கள் பெயர் வெளிவரும் என கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement