சினிமா

சொக்கும் பார்வையால் சூடேற்றும் கவர்ச்சி புயல் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவிருக்கும் பிரபல சர்ச்சை நாயகி! அட..யார்னு பார்த்தீர்களா!

Summary:

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாகவும்,

தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாகவும்,  பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றசாட்டை வைத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் அதற்காக அவர் சாலையில் அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு அனைவரையும் அதிர வைத்தார்.

மேலும் ஸ்ரீ ரெட்டி தன்னை பயன்படுத்தி ஏமாற்றியதாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர்கள், நடிகர்கள் சிலரின் பெயர்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பலரும் எதிர்ப்பு, கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூகவலைத்தளங்களில்  பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார்.

sri reddyக்கான பட முடிவுகள்

இந்த நிலையில் தற்பொழுது நடிகை ஸ்ரீரெட்டி மறைந்த முன்னணி நடிகையும், கவர்ச்சி புயலுமான  சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இப்படத்தை விளம்பர படங்களை இயக்கிய மது  இயக்குவுள்ளார். மேலும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும்  தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக்கப்படுகிறது.இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Advertisement