சினிமா

இவர்கள் அனைவரிடமும் நான் ஏன் படுக்கைக்கு சென்றேன் - விளக்கம் சொன்ன ஸ்ரீரெட்டி!

Summary:

sri reddy explain her bed sharing experience

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள் என பலர் மீது பாலியல் புகார் அளித்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. மேலும் ஒவ்வொருவரும் தன்னை எப்படி படுக்கையில் பயன்படுத்திக் கொண்டனர் என்பதையும், தற்போது தமிழ் நடிகர்கள் படுக்கையை பகிர்ந்துகொண்ட விஷயத்தை லீக் செய்யும்  ஸ்ரீரெட்டி எதற்காக பிரபலங்களோடு படுக்கையை பகிர்ந்துகொண்டேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைகள் செய்தவர்களை பட்டியலிட்டதால் தெலுங்கு சினிமா உலகம் பரபரப்பானது போல தற்போது தமிழ் திரையுலகமும்  மேலும் பரபரப்பாகிவருகிறது.


தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாக கூறி ஸ்ரீ ரெட்டி என்ற நடிகை ''ஸ்ரீ லீக்ஸ்'' என்ற பெயரில் நடிகைகளிடம் தவறாக நடந்தவர்கள் பெயர்களையும், புகைப்படங்களையும் வெளியிடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிச்சியை ஏற்படுத்தினார்.

மேலும், படுக்கை அறைக்கு நடிகைகள் அழைக்கப்படுவதைக் கண்டித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தெலுங்கு திரைபட உலகம் அமைதியாக இருப்பதாக கூறி, ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை கட்டிடம் முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் குதித்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. 

சில நடிகர்களும், தயாரிப்பாளர்களும் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும், அங்கு வாய்ப்பு தேடி வரும்  பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சமீபத்தில், தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் ஸ்ரீரெட்டி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில், தமிழ் பட இயக்குநர் “முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை. நீங்கள்கூட ஒரு பெரிய மனிதர்” என குறிப்பிட்டு இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார்.

5 வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நட்சத்திர கிரிக்கெட் நடந்தபோது பார்க் ஹோட்டலில் நடந்த பார்ட்டி ஞாபகம் இருக்கா மிஸ்டர் ஸ்ரீகாந்த்...? நீ எனது அந்த ___________ சுவைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து... என்னுடன் டான்ஸ் ஆடும் போது எனக்கு நடிக்க வாய்ப்பு தருவதாக சொன்னாயே.. ஞாபகம் இருக்கா... என தனது பதிவில் தெளிவாக அந்தரங்க செயலை பகிரங்கமாக பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து லாரன்ஸ் பற்றி பதிவிட்ட ஸ்ரீ ரெட்டி ”சில நண்பர்கள் மூலமாக மாஸ்டர் ராகவா லாரன்ஸ் எனக்கு அறிமுகமானார். கொல்கொண்டா ஹோட்டலின் லாபியில் நாங்கள் சந்தித்தோம். அவர் என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். அவரது அறையில் குரு ராகவேந்திராவின் படம் மற்றும் ருத்ராஷைகள் இருந்ததை பார்த்து பிரமித்துப் போனேன். அதன் பின் என்னிடம், தான் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்ததாகவும், நிறைய ஏழை சிறுவர்களுக்கு உதவுவதாகவும் சொன்னார். அதனால் நான் அவரை நம்பினேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் தன் உண்மை முகத்தை காட்டத் தொடங்கினார்.” என்று தன் பதிவில் ஸ்ரீரெட்டி குறிப்பிட்டிருக்கிறார்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி. ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டியின் புகாரை அனைவருமே மறுத்துள்ளனர்.  

இதனையடுத்து, நடிகைகள் யார் யாருடன் படுக்கைக்கு சென்றுள்ளனர் என ஒரு லிஸ்டையும் வெளியிட்டார். அதில், நயன்தாரா, திரிஷா, சமந்தா, காஜல் வாய் திறந்தால் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களை விட அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்களின் பட்டியல் எவ்வளவு பெரியது என்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார். ஆனால் நடிகைகள் பெயரை ஸ்ரீரெட்டி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக நடிகைகளின் பெயரின் முதல் இரண்டு எழுத்து மற்றும் நடு எழுத்து மற்றும் கடைசி எழுத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் ஸ்ரீரெட்டி கூறியிருப்பது நயன்தாரா, திரிஷா, சமந்தா மற்றும் காஜல் தான் என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இதனையடுத்து ஸ்ரீ ரெட்டியை முகநூலில் பின்தொடருவோர் பல கேள்விகளை முன் வைத்தனர். அதில் தான் எதற்காக பிரபலங்களோடு படுக்கையை பகிர்ந்துகொண்டேன் என கூறியுள்ளார்.

அவர் ஏமாற்றினார், இவர் ஏமாற்றினார் என்று கூறுகிறீர்களே, நீங்கள் ஏன் அந்த பிரபலங்களோடு படுக்கைக்கு சென்றீர்கள் என்று கேள்விகளை பேட்டி ஒன்றில் ஸ்ரீ ரெட்டியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், தான் வீட்டை விட்டு வெளியேறி தனியாக இருப்பதால் தனக்கு உணவு, வாடகை, பிற செலவுகளுக்கு பணம் தேவைப்பட்டதால் படுக்கைக்கு சென்றதாக கூறினார்.

இப்படி செய்வதற்கு வேறு வேலை பார்க்கலாமே என்ற கேள்விக்கு, நான் கிளாமர் துறையை சேர்ந்தவள். அதனால் நான் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. அதுமட்டுமல்ல எனக்கு இந்த துறை தான் பிடித்துள்ளது பதிலளித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.


Advertisement