நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் வெளியாகும் பல உண்மைகள்!! போலீஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்!

நடிகை ஸ்ரீரெட்டி விவகாரத்தில் வெளியாகும் பல உண்மைகள்!! போலீஸ் விசாரணையில் அம்பலமான ரகசியம்!


sri reddy case


சினிமாத்துறையில்  நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும்  தயாரிப்பாளர்கள் என அனைவரும் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக அரை நிர்வாண போராட்டம் நடத்தி மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி.

மேலும்  தெலுங்கு திரையுலகின் பல பெரும் புள்ளிகள் மீது பாலியல் குற்றம்சாட்டி பெரும் பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் சினிமா பைனான்சியர் சுப்ரமணியம் என்பவர் தனது வீட்டிற்கு அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும்  புகார் அளித்தார். 

Sri reddy

இந்த நிலையில், இன்று காலை அவரை விசாரிக்க காவல்துறையினர் அழைத்திருந்தனர். ஆனால், ஸ்ரீரெட்டி மதியம் தாமதமாக காவல்நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அவரிடம் விசாரித்ததில், தயாரிப்பாளரை தானே வீட்டுக்கு அழைத்து, மது ஊற்றிக் கொடுத்ததாக ஸ்ரீரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தானே தன் வீட்டு கண்ணாடியை உடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.