பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
தல அஜித் குறித்து சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி முகநூலில் பதிவு!
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது என நடிகர்கள், இயக்குனர்கள் என பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு திரையுலகையே அதிர வைத்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்பொழுது தல அஜித் மீது ஒருதலை காதலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த் போன்றோர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார். மேலும் சமீபத்தில் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகர் நானி திருமணத்திற்கு முன்பு தன்னுடன் உறவில் இருந்ததாக சர்ச்சையை கிளப்பினார்.
இந்நிலையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பொள்ளாச்சி பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குறள் கொடுக்கும் வன்னம், போராட நானும் தயார் என முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனால் மக்களின் மனதில் தன்னைப் பற்றி நல்ல எண்ணங்கள் உருவாகும் என நினைத்தாரோ என்னவோ!
தற்பொழுது தல அஜித் மற்றும் அஜித் ரசிகர்களை கவரும் நோக்கத்தில், தனது முகநூல் பக்கத்தில் அஜித்தைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். ஆனால், அதிலும் அவர் பதிவிட்டுள்ள விதம் பல அஜித் ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளது. மேலும் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களும் போட்டி போட துவங்கிவிட்டனர்.
ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு இவ்வாறு எழுதியுள்ளார், "அவரது புகைப்படத்தை பார்க்காமல் நான் தூங்குவதேயில்லை; தமிழகத்தின் நம்பர் 1 புகழ்பெற்ற ஹீரோ அவர் தான். அவர் அனைத்து சர்ச்சைகளிலிலிருந்தும் விலகியே இருப்பவர், சாதுவாக பேசுபவர், குடும்பத்தை நேசிப்பவர், பார்ப்பதற்கு மட்டுமல்ல மனதளவிலும் அவர் சிறந்த மனிதர், சிறந்த தந்தை மற்றும் கணவர், அவர் கோடிக்கணக்கான பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர், அதில் நானும் ஒருத்தி; உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் 'தல'" என எழுதியுள்ளார்.