சினிமா

குடும்ப குத்துவிளக்கு ஸ்ரீ திவ்யாவின் தங்கையா இது! இப்படி மோசமா நடிச்சுள்ளாரே! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

Sri divya sister movie photos viral

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும்  ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில், பெங்களூரு நாட்கள், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதிவ்யா ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

ஸ்ரீ திவ்யாவின் தங்கை ஸ்ரீரம்யா. அவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ரம்யா யமுனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் அப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகும் நிலையில் ஸ்ரீதிவ்யாவின் தங்கையா இது இப்படி நடித்துள்ளாரே என விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

 


Advertisement