சினிமா

சிகிச்சை பெற்றுவந்த எஸ்.பி.பியின் தற்போதைய நிலை என்ன? மகன் சரண் வெளியிட்ட நல்ல செய்தி!

Summary:

Spb charan tweet about her father health condition

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனை தொடந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனாவிலிருந்தும் மீண்டுள்ளார்.  இந்த நிலையில் பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் நாள்தோறும் தகவல் வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் அவர் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து நேற்று 
வெளியிட்ட  பதிவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது. அது நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என்ற நம்பிக்கை உள்ளது.  மருத்துவ குழுவினருக்கும், அப்பா குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.


Advertisement