சினிமா

எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அவரது மகன் வெளியிட்ட வீடியோ பதிவு..

Summary:

spb-charan-latest-video-about-s-p-balasubrahmanyam-health-condition

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் எஸ்பிபி அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி பரவியது. அதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அப்பா நேற்று இருந்த அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறார். அவர் உடல் நிலை stable ஆக இருக்கிறது. அவர் உடல் நிலை இன்னும் சற்று கிரிட்டிக்களான நிலையில் தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.பிரச்சனை எதுவும் இல்லை என கூறியுள்ளார். 

View this post on Instagram

#Spb heathupdate 17/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on


Advertisement