சினிமா

அதிரடி வெற்றி..தமிழக முதல்வராகும் மு.க ஸ்டாலின்! செம ஹேப்பியாக நடிகர் சூரி என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா!!

Summary:

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நேற்று காலை துவங்கி மிகவும் விறுவிறுப்ப

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைகள் நேற்று காலை துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனடிப்படையில் திமுக 159 தொகுதிகளில் முன்னிலையில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியை பிடித்து முதன்முதலாக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.

இந்நிலையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு பல அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் மு.க ஸ்டாலின் அவர்கள் மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி காமெடி நடிகரான சூரி  முதல்வராகவிருக்கும் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சூரி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.

 


Advertisement