"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
சூரி ஹீரோவாக நடிக்கும் 3வது படம்... வெற்றிமாறன் உதவி இயக்குனருடன் கைகோர்த்த சூரி... படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்.!
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகம் ஆகியவர் சூரி. தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக வலம் வந்த இவரை விடுதலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆக்கினார் வெற்றிமாறன்.
அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவ கார்த்திகேயன் தயாரிப்பில் கொடுங்காளி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூரி. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் ஆகியோரை வைத்து திரைப்படங்களை இயக்கிய வெற்றிமாறனின் உதவி இயக்குனர் துரை செந்தில்குமார் என்பவரின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த துரை செந்தில்குமார் சிவ கார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் மற்றும் காக்கிச்சட்டை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். மேலும் தனுஷ் நடிப்பில் உருவான கொடி மற்றும் பட்டாசு ஆகிய திரைப்படங்களுக்கு இயக்குனராக பணியாற்றியவர்.
வெற்றிமாறனின் கதையில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு கருடன் என பெயர் வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இன்று இந்த திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.