சூரியின் கருடன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்.!

சூரியின் கருடன் திரைப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அசத்தல் தகவல்.!



Soori in karudan movie release on 2024 March

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான சூரி தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த விடுதலை திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

Soori

இதனிடையே இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இயக்கத்தில் கருடன் என்ற ஆக்சன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, உன்னி முகுந்தன், ரேவதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Soori

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி அன்று கருடன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.