சினிமா

வாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே! உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்!! என்ன காரணம் தெரியுமா?

Summary:

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி ஓடிடியில்  நேரடியாக வெளியாகி ரசிகர

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி ஓடிடியில்  நேரடியாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இத்திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

 இந்தநிலையில் கடந்த மாதம் சூரரைப்போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதின் பொதுப் பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்று முன்னேறியுள்ள 366 திரைப்படங்களின் பட்டியலில் சூரரைப்போற்று திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகைக்கான பிரிவுகளில் சூரரைப்போற்று திரைப்படம் இடம்பெற்றுள்ளது இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Soorarai Pottru Suriya- Dinamani

இதனைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் 10 வரை வாக்கெடுப்பு நடைபெற்று 15 ஆம் தேதி ஆஸ்கார் விருதுக்கான இறுதி பட்டியல் வெளியாகும். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25ஆம் தேதி ஆஸ்கார் விருது விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் சூரரை போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதினை தட்டி செல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
 


Advertisement