வெளியானது.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூரரைப் போற்று.!

வெளியானது.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூரரைப் போற்று.!


soorarai potru movie released

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால், எதிர்பார்த்தப்படி இந்திய விமானத்துறையின் அனுமதி உடனடியாக கிடைக்காமல் தாமதமாக கிடைத்ததால் படத்தினை தீபாவளியொட்டி நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில், சூரரை போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றினையும் அவர் வெளியுள்ளார். இந்திய நேரப்படி இரவு 10:30மணிக்கு வெளியாகும் சூரரைப் போற்று திரைப்படத்தை வியாழன் காலையில் அல்லது பிற்பகலில்தான் பெருமளவிலான ரசிகர்கள் பார்க்கும் வாய்ப்பு இருக்கிறது என கூறுகின்றனர்.