சினிமா

மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் சூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

Summary:

Soodhu kavvum sanchitha shetty latest photos

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. கர்நாடக மாநிலம் பெங்களூருவை பூர்விகமாக கொண்ட இவர் கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சஞ்சிதா ஷெட்டி.

அதன்பின்னர் கொலைகாரன், வில்லா, என்னோடு விளையாடு, ரம், என்கிட்ட மோததே என அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடித்தார். ஆனால், சூது கவ்வும் படத்திற்கு பிறகு இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை.

தற்போது பார்ட்டி, தேவதாஸ் பிரதர்ஸ் என இரண்டு தமிழ் படங்களில் நடித்துவருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இந்நிலையில் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சஞ்சிதா.

மிகவும் அழகாக, கவர்ச்சியாக இருக்கும் சஞ்சிதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.

View this post on Instagram

Purple love 💜

A post shared by Sanchita (@isanchitaa) on


Advertisement