சினிமா

உதவி கேட்டு குவியும் மெஸேஜ்கள்! மன்னிச்சுடுங்க.. வருத்தத்துடன் நடிகர் சோனு சூட் வெளியிட்ட வீடியோ!! ஏன் தெரியுமா??

Summary:

தமிழ் சினிமாவில் பல படங்களில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர

தமிழ் சினிமாவில் பல படங்களில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சோனு சூட் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் நல்ல உள்ளம் படைத்த ஹீரோவாவார். இவர் கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்துள்ளார். 

நடிகர் சோனு கொரோனாவை ஒழிக்க பாடுபட்ட நர்சுகள் மற்றும் மருத்துவர்கள் தங்க தனது 5 நட்சத்திர ஹோட்டலை இலவசமாக வழங்குவது, புலம்பெயர் தொழிலாளிகளை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வாகனங்கள் ஏற்பாடு செய்வது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது, விவசாயிகளுக்கு உதவுவது என தொடர்ந்து ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

மேலும் அவர் ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே தனது 10 கோடி மதிப்பிலான சொத்தினை அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தீவிரமாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு ஏராளமான அழைப்புகள், மெஸேஜ்கள் குவிந்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து நடிகர் சோனுசூட் தனது டுவிட்டர் பக்கத்தில், உதவிக் கேட்டவர்களை தொடர்புகொள்ள முடிந்தவரை முயற்சிக்கிறோம். தாமதங்கள் இருந்தால் அல்லது நாங்கள் தவறவிட்டால் மன்னித்து விடுங்கள் என வருத்தத்துடன்  கூறியுள்ளார்.


Advertisement