சினிமா

பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்கும் சோனியா அகர்வால்; முடிவு என்னவாக இருக்கும்

Summary:

சோனியா அகர்வால் என்றதுமே அனைவர்க்கும் நினைவிற்கு வரும் படங்கள் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் தான். ஏனெனில் அவர் இந்த படங்களில் மிகவும் தாராளமாக நடித்திருப்பார். 

soniya agarwal kadal konden க்கான பட முடிவு

இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. 

இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகவனை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாறு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

sonia agarwal 7g க்கான பட முடிவு


இந்நிலையில் தற்போது, ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் ‘உன்னால் என்னால்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அதிரடி வில்லி கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ் அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால், ராஜேஷை கொலை செய்து விட்டு அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார். அந்த வலையில் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா ஆகிய மூவரும் வந்து சிக்குகிறார்கள்.

இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் கதை. இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம் என்று இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா கூறியுள்ளார். 

முகமது ரிஸ்வான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத் தான் போக வேண்டும்.

sonia agarwal 7g க்கான பட முடிவு

அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம். இப்படம் வித்தியாசமாக இருக்கும்’ என்றார்.

இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் இயக்குனர் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள். 


Advertisement