தமிழகம் காதல் – உறவுகள்

அடர்ந்த முட்புதரிலிருந்து கேட்ட அலறல் சத்தம்! அம்பலமான ஈவு இரக்கமே இல்லாத மகனின் கேடுகெட்ட காரியம்!!

Summary:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் இருக்கு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏலியம்பேடு என்ற கிராமத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் அடர்ந்த முட்புதரில் இருந்து திடீரென ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது 2 கால்கள் செயலிழந்த நிலையில் வயதான மூதாட்டி ஒருவர் அழுதவாறு கிடந்துள்ளார்.

இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி சென்று அவரை மீட்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தநிலையில், அங்கு விரைந்த போலீசார்கள் மூதாட்டியை சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் அந்த மூதாட்டி  சென்னை மணலி பெரியசேக்காடு கிராமத்தை சேர்ந்த காந்திமதி எனவும், அவரது மூத்த மகன் ரவி கொத்தனார் வேலை செய்கிறார், 2-வது மகன் சங்கர் அருள் வாக்கு கூறி வந்துள்ளார் எனவும் தெரியவந்தது.

மேலும் அவரது 2-வது மகன் சங்கரே தாயை ஏமாற்றி மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்து முட்புதரில் வீசி விட்டு சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் நடந்துக்கொண்ட சங்கரை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 


Advertisement