சினிமா

அட! பிக்பாஸ் சோம்சேகரா இது! இப்படியொரு விளம்பரத்தில் நடித்துள்ளாரா? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

Summary:

பிக்பாஸ் சோமசேகர் உதய கிருஷ்ணா நெய் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு மிகவும் பரபரப்பாகவும்,  விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

இதில் 10வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் களமிறங்கியவர் மாடல் நடிகர் சோமசேகர். இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிய தமிழ் மகன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான விளம்பரங்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும் தனக்கான தனி அங்கீகாரம் கிடைக்காத நிலையில் அதற்காக அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ரசிகர்கள் சோம்சேகர் நடித்த ஒரு விளம்பரத்தை அடையாளம் கண்டறிந்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.  அதாவது சோம்சேகர் உதயகிருஷ்ணா நெய் விளம்பரத்தில் நடித்துள்ளார். அதனை கண்டறிந்த ரசிகர்கள் அத்தகைய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். 


Advertisement