பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
ட்ரெண்டிங் ஜோடி டோரா - புஜ்ஜி பிரிந்ததாக அறிவிப்பு: கண்ணீருடன் அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட ராணி.!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்பெற்று வந்த ஜோடி டோரா - புஜ்ஜி. இவர்களின் இயற்பெயர் ஹரி - ராணி. ஹரி பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய நபர் ஆவார்.
இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்தனர். மேலும், தங்களை வெளிப்படையாக காதல் ஜோடியாக அறிவித்து, தாங்கள் சகலவிதத்திலும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பலரின் கவனத்தை பெற்றது. இந்நிலையில், போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஹரி, தனக்கு கிடைக்கும் பணத்தை போதைப்பழக்கத்திற்கு உபயோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மஞ்சள் காமாலை பாதிப்பும் உண்டானதாகவும், அதற்கு சிகிச்சை மேற்கொண்டு உடல்நிலை சரியான பின்னரும் போதைப்பழக்கத்தை ஹரி கைவிடவில்லை என்றும் தெரியவருகிறது.
இந்த விஷயம் குறித்து ராணி தனது காதலரின் வீட்டாரிடம் தெரிவித்தபோது, அவர்களும் எவ்வித பதிலும் அளிக்காமல் மௌனம் காத்துள்ளனர். ஒருகட்டத்தில் பண விவகாரத்தில் ஹரி மோசடி செய்துள்ளதை ராணி கண்டறிந்துள்ளார்.
இதுதொடர்பான சண்டை ஏற்பட்ட நிலையில், ராணியின் தொலைபேசி எண்ணை பொதுவெளியில் பதிவிட்ட ஹரி, இந்த பெண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள், நல்ல கம்பெனி கிடைக்கும் என அவதூறாகவும் பதிவு செய்துள்ளார்.
இதனால் பலரும் ராணிக்கு தொடர்பு கொண்டு தவறான நோக்கத்துடன் பேசி இருக்கின்றனர். இந்த சம்பவங்களால் மனமுடைந்துபோன ராணி, தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில், ஹரி என்னை ஏமாற்றிவிட்டார். நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். எனது அம்மா என்னை கஷ்டப்பட்டு, தெருவில் மீன் விற்பனை செய்து வளர்த்தார். நான் கேட்டேன் என செல்போன், கேமிரா வாங்கி தந்தார்.
நாங்கள் ஆசைப்படுகிறோம் என ரூ.5 இலட்சம் பணமும் கொடுத்து கார் வாங்கச்சொன்னார். ஆனால், ஹரி காருக்கு ரூ.3 இலட்சம் பணம் கொடுத்துவிட்டு, ரூ.2 இலட்சம் பணத்தை ஏமாற்றினார். சமூக வலைதளப்பாக்கத்தில் ப்ரமோஷனுக்கு வரும் பணம் குறித்த விபரங்கள் எனது எதுவும் தெரியாது.
ஹரி என்னை நன்றாக பார்த்துக்கொள்வான் என முழுமையாக நம்பி இருந்தேன். ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ஏமாற்றி, பணத்திலும் துரோகம் செய்து முதுகில் குத்திவிட்டார். இதுபோதாது என பெண்களுடன் தொடர்பும் வைத்துக்கொண்டுள்ளார். நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்" என கதறி அழுதுள்ளார்.