
Sneka prasana
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா. என்னவளே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சினேகா பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
குழந்தை பிறந்ததிலிருந்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை சினேகா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சினேகாவுக்கு சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு பெயர் வைத்துள்ளனர். அதாவது முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்கும் என நினைத்து ஆத்யா என்ற பெயரை தேர்வு செய்தார்களாம்.
ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையனதால், தற்போது பிறந்த பெண் குழந்தைக்கு ஆத்யா என்ற பெயரை சற்று மாற்றிஆத்யந்தா என்று பெயர் வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement