சினிமா

பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை ஸ்னேகா! யார் அந்த நடிகர் தெரியுமா?

Summary:

Sneka casting with dhanush in mother character

தமிழ் சினிமாவில் முன்னை நடிகைககளில் ஒருவராக  இருந்தவர் நடிகை ஸ்னேகா. இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் இலைஞர்களின் கனவு கன்னியாகவும் இருந்துள்ளார் நடிகை ஸ்னேகா. விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்ளின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்னேகா. இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருத்த ஸ்னேகா, சிவகார்த்திகேயன் நடிப்பில வெளியான வேலைக்காரன் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுவருகிறார். படவாய்ப்புகள் வந்தாலும் கதை செட் ஆகாததால் வாய்ப்புகளை மறுத்து வருகிறார் ஸ்னேகா. இந்நிலையில் அவர் தற்போது இயக்குனர் துரைசெந்தில்குமார்-தனுஷ் படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இதில் தனுஷுக்கு இரட்டை வேடம்.

அப்பா தனுஷுக்கு ஜோடியாகவும், மகன் தனுஷுக்கு அம்மாவாகவும் நடிக்கிறார் சினேகா.


Advertisement