சினிமா

மூத்த அண்ணன், எனக்கான ஆண் தேவதை.. நெகிழ்ச்சியுடன் நடிகர் கமலுக்கு நன்றி கூறிய புது மாப்பிள்ளை!! யார்னு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி பிரபலமான கவிஞரும், நடிகரும் மற்றும் ப

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி பிரபலமான கவிஞரும், நடிகரும் மற்றும் பிக்பாஸ் பிரபலமுமான சினேகன் நடிகை கன்னிகா ரவியை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிரீன் பார்க் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். நடிகர் கமல் தாலி எடுத்து கொடுக்க மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. அதனைக் கண்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். இந்நிலையில் தன்னுடைய திருமணத்தை முன்னின்று நடத்தி கொடுத்த நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியுடன் சினேகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், எனக்கான எல்லா உறவுமாய் இருந்து என் இல்லற இணைவு விழாவை முன்னின்று நடத்திய என் மூத்த அண்ணன், என் தலைவர், எனக்கான ஆண் தேவதைக்கு என் ஆயுள் உள்ளவரை நன்றிகளைக் கூறிக்கொண்டே இருப்பேன். நன்றி அண்ணா" என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


 


Advertisement