நடிகையுடன், பிக்பாஸ் சினேகனுக்கு திருமணம் முடிஞ்சாச்சு! யாரெல்லாம் வந்திருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!

நடிகையுடன், பிக்பாஸ் சினேகனுக்கு திருமணம் முடிஞ்சாச்சு! யாரெல்லாம் வந்திருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!


snegan-kannika-marriage-photo-viral

பாடலாசிரியர், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியுமான சினேகனுக்கு, நடிகை கன்னிகா ரவியுடன் நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் எக்கசக்கமான ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருப்பவர் சினேகன். அதனை தொடர்ந்து நடிகராக களமிறங்கிய அவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பின்னர் சினேகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் சினேகன் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அண்மையில் சினேகனுக்கு, சின்னத்திரை தொடர்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள  நடிகை கன்னிகா ரவியுடன் 
ஜூலை 29-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக  தகவல்கள் வெளியானது.

Snegan

 அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் இன்று மிகவும் கோலாகலமாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த அழகிய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

SneganSneganSnegan