அட..சூப்பர்! பிக்பாஸ் சினேகன் வீட்டில் விசேஷம்! அதுவும் என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!

அட..சூப்பர்! பிக்பாஸ் சினேகன் வீட்டில் விசேஷம்! அதுவும் என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!


snegan-going-to-get-marry-soon

தமிழ்சினிமாவில் பல படங்களில், ஏராளமான ஹிட் பாடல்களை எழுதி பெரும் பிரபலமாக இருந்தவர் சினேகன். அதனை தொடர்ந்து அவர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பின்னர் சில படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் சினேகன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார்.

மேலும் இந்த நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைய செய்தது. அதனைத் தொடர்ந்து சினேகன் தற்போது பொம்மிவீரன் என்ற படத்தில் நடித்துள்ளார். ரமேஷ் மகாராஜா இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. 

Snegan

மேலும் சினேகன் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அண்மையில்கூட  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விருகம்பாக்கம் பகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்தநிலையில் சினேகனுக்கு தனது உறவுக்கார பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கமலின் தலைமையில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.