ப்பா.. 2 குழந்தைகளுக்கு அம்மான்னா யார் நம்புவாங்க! நடிகை சினேகா எப்படியிருக்காங்க பார்த்தீங்களா!!

ப்பா.. 2 குழந்தைகளுக்கு அம்மானா யார் நம்புவாங்க! ரசிகர்களை மயக்கிய நடிகை சினேகா வெளியிட்ட புகைப்படங்கள்!!


snega-latest-photos-viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக, புன்னகை இளவரசியாக வலம் வந்தவர் நடிகை சினேகா.  தமிழில் மாதவன் நடிப்பில் வெளிவந்த என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த அவர் பலர் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும்,நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த நட்சத்திர தம்பதிகளுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். 

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில்  ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவர். இந்நிலையில் சினேகா தற்போது மஞ்சள் நிற உடையில், தனது ஆயுதமான கியூட் சிரிப்பால் அனைவரையும் மயக்கும் வகையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.